Site icon Taminews|Lankanews|Breackingnews

கடவுளின் சிலையில் இருந்து நீர் கசிந்தது தொடர்பில் பங்குத் தந்தை கருத்து

கடவுளின் சிலையில் இருந்து நீர் கசிந்தது தொடர்பில் பங்குத் தந்தை கருத்து

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று (28) நீர் கசிந்தமை இறைவனின் அற்புத செயல் என பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததுடன் அப்பகுதியில் பெருந்திரளானோர் குவிந்தனர்.சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்.சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர்,பொலிசார்,பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.சற்றுமுன் குறித்த சிலுவத்தை பார்வையிட்ட கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை இது கடவுளின் அற்புதங்களில் ஒன்றென தெரிவித்தார்

Exit mobile version