Tuesday, September 23, 2025
Homeஇலங்கைகட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

“குஷ்” என்ற போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இரண்டு பயணிகள் இன்று (23) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் 05 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட “குஷ்” போதைப்பொருளை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த 29 வயதானவர் என்றும் மற்றைய சந்தேகநபர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதானவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் தாய்லாந்தின் பொங்கொக்கில் இந்த போதைப்பொருள் தொகையை கொள்வனவு செய்து, இந்தியாவின் புது டெல்லிக்கு வந்து, அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் AI-277 ஊடாக இன்று காலை 6.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.அவர்களின் இரண்டு பயணப்பொதிகள் மற்றும் மேலும் ஒரு பையிலும், 05 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 092 கிராம் “குஷ்” போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட “குஷ்” போதைப்பொருளும் அவற்றைக் கொண்டு வந்த இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!