Site icon Taminews|Lankanews|Breackingnews

கனடா பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தி குளோப் மற்றும் மெயில் தங்களுக்கு கிடைத்த தகவல்களில் ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.அதில், எங்களிடம் பேசிய படி ஜஸ்டின் ட்ரூடோ எப்போது இராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை. ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார். அப்போது கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தபோது முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போயகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

Exit mobile version