Home » கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு

by newsteam
0 comments
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன.வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் பெண்நோய்யியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணரும் ,வைத்தியர்களும், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நெதர்லாந்து அரசின் 5320மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பெண்நோய்யியல் சிகிச்சை நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு நிலையம் நீண்டகாலம் செயற்படாது காணப்பட்டது.இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் முயற்சியைத்தொடர்ந்து குறித்த செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!