கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்றைய தினம் (23.01.2025) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்இன்று தமது வர்த்தக நிலையங்களை மூடியபடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன் போது தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்துடன் மெகா சேல்ஸ் என கூறி கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
எனவே உடனடியாக இப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என வர்த்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றினையும் கையலித்தனர்.இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்று தருவதாக கூறினார்.
கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்
6