Site icon Taminews|Lankanews|Breackingnews

கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து விபத்து

கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து விபத்து

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, அதிகாலையில் கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.தொழில்நுட்பக் கோளாறு விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version