கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள விஸ்கி மற்றும் சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவற்றினை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற போது இலங்கை பயணிகள் நேற்று இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் மற்றவர் யட்டியந்தோட்டை பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.சந்தேக நபர்கள் நேற்று இரவு 06.30 மணிக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸின EK-652 விமானம் மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.குறித்த பயணிகள் 10 சூட்கேஸ்களில் 116,200 வெளிநாட்டுத் தயாரிப்பு மென்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் 117 போத்தல் விஸ்கி ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இரு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.