Home » சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை போராட்டம்

சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை போராட்டம்

by newsteam
0 comments
சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை போராட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குறித்த மாணவிக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும், தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை காலணிகள் அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்றையதினம் 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம் நடத்தினார்.பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார்.அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்குக் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்… வீரவேல் என முழக்கமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!