Site icon Taminews|Lankanews|Breackingnews

ஜனவரி 31 ஆம் திகதி முதல் காங்கேசன்துறைக்கு இரவு தபால் ரயில்

ஜனவரி 31 ஆம் திகதி முதல் காங்கேசன்துறைக்கு இரவு தபால் ரயில்

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் திணைக்களம் கூறுகிறது.

Exit mobile version