Home » டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி – பொலிஸார் கடும் எச்சரிக்கை

டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி – பொலிஸார் கடும் எச்சரிக்கை

by newsteam
0 comments
டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி - பொலிஸார் கடும் எச்சரிக்கை

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.எனவே, சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி தூண்டுதல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.அதேபோல், கணக்கு இலக்கங்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற இரகசியத் தகவல்களை வெளியாட்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!