Home » தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

by newsteam
0 comments
தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பம்பஹின்ன சந்தியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் எனவும் மருத்துவ மையத்தின் வசதிகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த மாணவர்களுக்குச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் கடந்த ஒக்டோபர் மாதத்திலேயே காலாவதியாகியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!