Home » தனமல்வில-வெல்லவாய வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்

தனமல்வில-வெல்லவாய வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்

by newsteam
0 comments
தனமல்வில-வெல்லவாய வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம்

தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், இறந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது.காயமடைந்தவர்கள் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கவலைக்கிடமாக இருந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.காயமடைந்தவர்கள் 23, 35 மற்றும் 49 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!