Site icon Taminews|Lankanews|Breackingnews

தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மொரகொட பொலிஸ் பிரிவின் மானங்கட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக மொரகொட பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.அதன்படி, விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலின் விளைவாக குறித்த நபர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.உயிரிழந்த நபர் தான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது உயிரிழந்தவரின் மைத்துனர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதன் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்தது பின்னர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.இந்தக் கொலை தொடர்பாக 50 வயது சந்தேக நபரும் 43 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version