தலங்கம காவல் பிரிவின் அக்குரேகொட பகுதியில் கணினிகள் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்தி இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படை புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 கையடக்கத் தொலைபேசிகள், 03 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள், 22, 30 மற்றும் 43 வயதுக்குட்பட்ட பெண்கள் என்றும் 25 – 29 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.