Site icon Taminews|Lankanews|Breackingnews

திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 09 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.அவர்களுக்கு, வயிற்று வலி, மயக்க நிலை மற்றும் வாந்தி போன்ற நோய் நிலைமைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.உணவு விசமானமையால் அவர்களுக்கு இவ்வாறான நோய் நிலைமைகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், அவர்களது உடல்நிலை மோசமாக இல்லை என டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version