Home » தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

by newsteam
0 comments
தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இன்று(8)யாழ் அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.குறித்த செயற்றிட்டங்களின் தொடர்ச்சியை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வரவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் ஈழ வீணைச் சின்னத்தை வெற்றிபெறச் செய்து எதிர்காலத்தை தமக்கானதாக உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான கட்சியின் வலுப்படுத்தலை முன்னிறுத்தி அனலைதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!