Site icon Taminews|Lankanews|Breackingnews

துருக்கி விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் – 76 பேர் உயிரிழப்பு

துருக்கி விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் - 76 பேர் உயிரிழப்பு

துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்தனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version