Home » தொடர் போதைப் பாவனையால் இளைஞன் திடீர் மரணம்

தொடர் போதைப் பாவனையால் இளைஞன் திடீர் மரணம்

by newsteam
0 comments
தொடர் போதைப் பாவனையால் இளைஞன் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்துள்ளார்.இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததையடுத்து ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!