Saturday, June 14, 2025
Homeஇலங்கைநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதையும் படியுங்கள்:  சாவகச்சேரியில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு - தாய் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!