நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 வகை அலங்கார மீன்களுக்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித ஜினதாச இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி, பிரானா, நைப் பிஸ், எலிகேடர் கார் மற்றும் ரெட் லைன் ஸ்னேக் ஆகிய மீன் இனங்களை இறக்குமதி செய்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும், 20 ஆம் திகதி முதல் குறித்த மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்தல், நீர் நிலைகளில் விடுதல் மற்றும் விற்பனை செய்தல் என்பன தடை செய்யப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.