Site icon Taminews|Lankanews|Breackingnews

நீரில் மூழ்கிய சிறுவர்கள் – ஒருவர் பலி

நீரில் மூழ்கிய சிறுவர்கள் - ஒருவர் பலி

வாரியபொல, ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த இரண்டு சிறுவர்களும் கல்குவாரியில் உள்ள நீர் நிறைந்த குழியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய நிலையில், பின்னர் இருவரையும் பிரதேசவாசிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், மற்றைய சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.13 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்ததுடன், 16 வயதான சிறுவன் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் வாரியபொல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version