Home » பழுதடைந்த பழங்களை கைப்பற்றி அழித்த அதிகாரிகள்

பழுதடைந்த பழங்களை கைப்பற்றி அழித்த அதிகாரிகள்

by newsteam
0 comments
பழுதடைந்த பழங்களை கைப்பற்றி அழித்த அதிகாரிகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த திராட்சை, தோடம் பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குறித்த பங்கசு படர்ந்த திராட்சை பழங்கள் அழுகிய தோடம்பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் யாவும் இன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.இன்று (01) முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் வீதியோரங்களில் விற்பனை செய்யப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பணிப்பாளர் ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சென்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் பெருந்தொகையான பழுதடைந்த திராட்சை பழங்கள் தோடம்பழங்கள் உள்ளிட்ட பழங்களை மீட்டு அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.இந்நடவடிக்கையை முன்னெடுத்த சுகாதார அதிகாரிகள் குறித்த திராட்சை பழங்கள் மற்றும் ஏனைய பழங்களை வீதியோரங்களில் விற்பனை செய்த நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.குறித்த பழ வகைகள் யாவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், வெளி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக இங்கு கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!