Site icon Taminews|Lankanews|Breackingnews

பஸ் மிதிப்பலகையில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

பஸ் மிதிப்பலகையில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிப்பலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்தவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version