Thursday, April 24, 2025
Homeஇலங்கைபுத்தளத்தில் கடற்படையினர் அதிரடி - நால்வர் கைது

புத்தளத்தில் கடற்படையினர் அதிரடி – நால்வர் கைது

புத்தளம் – கற்பிட்டி, ஆலங்குடா கடற்பிரதேசம் மற்றும் மதுரங்குளி தொடுவா ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை கிருமி நாசிகள், ஏலக்கா, கையடக்கத் தொலைபேசிகள், குளிர்பானம், இலத்திரனியல் உபகரணங்கள், சல்வாரி துணிகள் மற்றும் பறவைகள் என்பனவற்றுடன் சந்தேக நபர்கள் நான்கு பேர் கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 வயது முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கற்பிட்டி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்வும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.வடமேற்கு கட்டளையின் விஜய கடற்படையினர் நேற்று கற்பிட்டி ஆலங்குடா கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திரப் படகு ஒன்றினை பரிசோதனை செய்தனர்.இதன்போது சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படும் 240 கிலோ கிராம் ஏலக்கா 200 கிலோ கிராம் ஏலக்கா விதைகள் மற்றும் பல்வேறு வகையைச் சேர்ந்த 59 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிங்கி இயந்திர படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.இதேவேளை, வடமேற்கு கட்டளையின் புத்தளம் – தம்பபண்ணி கடற்படையினர் மதுரங்குளி, தொடுவா பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை பரிசோதனை செய்துள்ளனர்.இதன்போது, குறித்த லொறியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏலக்காய் 75 கிலோ கிராம், 83 சல்வாரி துணிகள், கிருமி நாசினி 80 போத்தல்கள், 566 குளிர்பான போத்தல்கள், 80 பல்வேறு இன பறவைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி என்பனவற்றுடன் லொறியில் பயணித்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிருமி நாசிகள், ஏலக்கா, கையடக்கத் தொலைபேசிகள், குளிர்பானம், இலத்திரனியல் உபகரணங்கள், சல்வாரி துணிகள் மற்றும் பறவைகள் என்பனவற்றுடன் டிங்கி இயந்திரப் படகு, லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குருநாகலுக்கு இடமாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!