Site icon Taminews|Lankanews|Breackingnews

மட்டக்களப்பு காட்டுபகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் குழந்தை

மட்டக்களப்பு காட்டுபகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் குழந்தை

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்று சடலமாக இன்று (15) காலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட முறக்கொட்டான்சேனை காட்டுப் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ள நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிஸர் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன் குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version