மட்டக்களப்பு மாவட்டம், சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதிக்குள் புகுந்த முதலையொன்றை அப் பகுதி வாழ் மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.இப் பகுதிக்குள் நேற்று (7) அதிகாலை புகுந்த 6 அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.விழிப்புடன் செயற்பட்ட பிரதேச மக்கள், குறித்த முதலை மீது கட்டுப்பாடுடன் நடவடிக்கையெடுத்து அதனை பாதுகாப்பாக மடக்கிப்பிடித்து, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.அண்மைக் காலமாக மட்டக்களப்பில் குடிமனைப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.