Site icon Taminews|Lankanews|Breackingnews

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படாது – மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம்

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படாது - மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம்

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யு.எல்.உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.கொழும்பில் (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அனைத்து சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை ஒழிக்கவும், அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கூறினார்.இதேவேளை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அவர் கூறுகையில், சம்பள அதிகரிப்பு காரணமாக அரச ஊழியர்கள் எதிர்காலத்தில் உத்வேகத்துடன் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version