மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 ஆவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மன்னார் நகரில் சுழற்சி முறையில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.