முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விசாரிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார்.இதன்படி, அவர் நேற்று முற்பகல் 9.30 இருந்து பிற்பகல் 1.30 வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இரண்டு தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் அங்கு முன்னிலையாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக யோசித ராஜபக்ஸவையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அவரை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்
9
previous post