Home » மஹிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வ இல்லம் முறையாக இதுவரை ஒப்படைக்கவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மஹிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வ இல்லம் முறையாக இதுவரை ஒப்படைக்கவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

by newsteam
0 comments
மஹிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வ இல்லம் முறையாக இதுவரை ஒப்படைக்கவில்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் ஒப்படைக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துள்ளன.எனினும், அவர் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை பொது நிர்வாக அமைச்சிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகளை இரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!