யாழ்ப்பாணம் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஆனைக்கோட்டை – கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன்(வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவருக்கு கடந்த 17ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.கிருமித்தொற்றினால் உடற்கூறுகள் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.