யாழ்ப்பாணத்தில் ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் ஒருவர் விடுதி ஒன்றில் பொலிஸ் அதிகாரியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.யாழ் நகரில் அமைத்துள்ள விடுதி ஒன்றில் இட்டம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,29 வயதான ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண்ணின் கணவன் அண்மையில் கனடா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து குறித்த பெண் கணவனின் பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார்.இந்நிலையில் கணவனின் திருமணமான தம்பி வேறொரு பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் பெற்றோரை காணவரும் வேளை , அண்ணனின் மனைவியுடன் முரண்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றதாக கூறப்படுகின்றது.அந்த பிரச்சனைக்காக பொலிஸ் நிலையம் சென்ற குறித்த பெண்ணுக்கு அங்குள்ள பொலிஸ் அதிகாரியுடன் நட்பு ஏற்பட்டு அது விடுதி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.அது தொடர்பில் அறிந்த மைத்துனர் , சிலரை துணைக்கு அழைத்துகொண்டு , அண்ணனின் மனைவியும் பொலிஸ் அதிகாரியும் தங்கிய விடுதி அறைக்கு சென்றபோது, பெண்ணுடன் தங்கியிருந்த அதிகாரி அரைகுறை ஆடையுடன் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோரிடம் வெளிநாட்டு மோகம் தலைதூக்கியுள்ள நிலையில், இளம் குடும்பங்கள் பிரிவதற்கும் அதுவே காரணமாவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.