Site icon Taminews|Lankanews|Breackingnews

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நாடத்திய போது, 15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராமம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version