Home » யாழில் 50 இலட்சம் பெறுமதியுடைய நாணயம் ரூ தங்க ஆபரண கொள்ளை – பிரதான சந்தேகநபர் கைது

யாழில் 50 இலட்சம் பெறுமதியுடைய நாணயம் ரூ தங்க ஆபரண கொள்ளை – பிரதான சந்தேகநபர் கைது

by newsteam
0 comments
யாழில் 50 இலட்சம் பெறுமதியுடைய நாணயம் ரூ தங்க ஆபரண கொள்ளை – பிரதான சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்று, இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகையான வெளிநாட்டு நாணயமும், தங்க ஆபரணங்களும் அண்மையில் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் தீவிர விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு முன்னெடுத்திருந்தது.இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (3) இரவு கைது செய்யப்பட்டார்.இதன்போது அவரிடம் இருந்து பெருந்தொகையான வௌிநாட்டு நாணயம் மற்றும் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!