யாழ்ப்பாணத்தில் , கனடாவுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சனை காரணமாக விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க் கிழமை (22) அவரது சடலம் காணப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டதுடன் சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.