Site icon Taminews|Lankanews|Breackingnews

யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் செய்த துணிச்சலான செயல்

யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் செய்த துணிச்சலான செயல்

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அன்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்று (02) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் எற்றிச் சென்றமையினை தொடர்ந்து குறித்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

Exit mobile version