Site icon Taminews|Lankanews|Breackingnews

யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (03.03.2025) மு.ப 09.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் முதலீட்டு பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தலைவர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் (காணி), இந்திய முதலீட்டாளர் குழு, காணி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்

Exit mobile version