Site icon Taminews|Lankanews|Breackingnews

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை ஒட்டி பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிக்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை ஒட்டி பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (09) ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. எனவே அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றையதினம் தகவல் விடுத்துள்ளனர்.உணவகம் (ஹோட்டல்) சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும் நிலையங்கள் (ஜஸ்கிறீம் கடை, ஜஸ்கிறீம் வாகனம், பூந்தி இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர் கடைகள் ) இவை அனைத்தும் தத்தமது பிரதேச உள்ளூராட்சி சபைகளின் அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும்.ஜஸ்கிறீம், உணவகங்கள், தேநீர், பூந்தி இனிப்பு, மிக்சர் சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.சர்பத் வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரமே ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்தல் வேண்டும். அத்துடன் அதற்கான பற்றுச் சீட்டினை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். உணவகத்திற்கும், சர்பத் கடைகளுக்குமான உரிமையாளர்கள் சனிக்கிழமை (07.06.2025) மாலை 4.00 மணிக்கு வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் உற்சவகால அலுவலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் கட்டாயம் பங்குபற்றுதல் வேண்டும்.காவடி உரிமையாளர்கள் 08.06.2025 க்கு முன்னர் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து அவரின் அனுமதியினை பெற்று கொள்ள வேண்டும்.உணவு கையாளும் நிலையங்கள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்.சிகரெட், புகையிலை, மதுசாரம் ஆலய வளாகத்தினுள்ளே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version