Home » வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

by newsteam
0 comments
வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

வவுனியா ஓமந்தை A9 வீதியில் 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்கள் அதேவேளையில் வன்னி பிராந்திய பிரதிபொலிஸ் மா அதிபரின் அவசர இலக்கமான 107 ற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப்பிடித்துள்ளனர்.
கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!