Site icon Taminews|Lankanews|Breackingnews

விமானப் பயணத்தின் போது உயிரிழந்த இலங்கை பெண்

விமானப் பயணத்தின் போது உயிரிழந்த இலங்கை பெண்

விமானத்தில் பயணித்த இலங்கை பெண்ணொருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தமையை அடுத்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ஈராக்கின் குர்திஸ் பிராந்தியத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.குறித்த பெண் நேற்று விமானத்தில் உயிரிழந்ததாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பிரான்சில் வசித்து வந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Exit mobile version