Home » அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு – பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர்

அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு – பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர்

by newsteam
0 comments
அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு - பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள் சிறுவர்களை பாதுகாத்துக் கொள்ள அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டுமென மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள் விளையாட்டு நிகழ்வுகளிலோ உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள் தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு குடிநீர் அருந்த வேண்டும்.இந்த அதிக உஷ்ணத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு தேவையற்ற விதத்தில் நண்பகல் வேலைகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் இதன் பாதிப்புக்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் கூடுதலாக சிறுவர்கள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறான காலகட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுவதை தவிர்க்க வேண்டும்.வயதானவர்கள் தேவையற்ற உடலை வருத்துகின்ற செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவே பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இதன் பாதிப்புக்களில் இருந்து தவித்துக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்டபிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!