கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடைகள் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதை விட அதிக விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.ஒரு தனி உரிமையாளர் அதிக விலைக்கு அரிசி விற்கமுற்பட்டால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுமிடத்தில், அவருக்கு ரூ. 1,00,000 முதல் ரூ. 5,00,000 வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாமென்று ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதிக்கலாம், அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது மேற்கூறிய இரண்டும் விதிக்கலாமென தெரிவித்துள்ளது.மேலும், அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்யலாமென்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.நடப்பாண்டில் இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட அரிசி தொடர்பான சோதனைகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்ற 105 கடைகள் மீது நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகாரசபை
4