Site icon Taminews|Lankanews|Breackingnews

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றவருக்கு அபராதம்

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றவருக்கு அபராதம்

கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிகபட்ச சில்லறை விலையான ரூ.80 ஐ விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதவான் ரூ.100,000 அபராதம் விதித்துள்ளார்.கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) விசாரணைப் பிரிவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபர், MRP விதிமுறைகளை மீறி, ரூ.80 விலையில் அடைக்கப்பட்ட 500 மில்லி குடிநீர் பாட்டிலை ரூ.150க்கு விற்றதாக CAA அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.மேலும், நுகர்வோரை சுரண்டலில் இருந்து பாதுகாக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக போத்தல் தண்ணீர் விற்பனை செய்வது அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்

Exit mobile version