Home » அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

by newsteam
0 comments
அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வுக்கு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் மற்றும் ஆசிரியர் மீது மாணவியின் சகோதரன், காதலன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தை கண்டித்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (26) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, கடந்த 23 ஆம் திகதி மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.இதன்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலன் மதுபோதையில் குறித்த ஆசிரியர் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களது இரு மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்ததையடுத்து பாடுகாயமடைந்த இருவரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்தனர்.இந்த அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று (26) திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்னால் காலை 9 மணிக்கு ஒன்று திரண்டனர்.இதனை தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!