Home » அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி

by newsteam
0 comments
அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த முன்னோடித் திட்டம் கொட்டாவ மற்றும் கடவத்தை இடமாறும் பகுதிகளுக்கு இடையே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணத்திற்கான கட்டணங்களை டெபிட், கடனட்டை மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முன்னோடித் திட்டத்தைத் தொடர்ந்து, மே மாதம் முதல் நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!