அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.