Home » அநுராதபுரம் வைத்தியசாலையின் மலம் மற்றும் சிறுநீர் மல்வத்து ஓயாவில்

அநுராதபுரம் வைத்தியசாலையின் மலம் மற்றும் சிறுநீர் மல்வத்து ஓயாவில்

by newsteam
0 comments
அநுராதபுரம் வைத்தியசாலையின் மலம் மற்றும் சிறுநீர் மல்வத்து ஓயாவில்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளின் மலம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுநீர் ஒழுங்கற்ற முறையில் வெளியேற்றப்படுவதால், பிரதேசத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நகரின் மைய கழிவுநீர் அமைப்பு மூலம் அனுராதபுரம் மல்வத்து ஓயாவில் கலப்பதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அப்பிரதேசத்தின் தேரர் ஒருவர் தெரிவித்தார்.இந்த நிலைமையால், சுவபா உயனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இந்த கழிவுநீர் மல்வத்து ஓயாவில் கலப்பதால், அங்கு குளிக்கும் பிரதேசவாசிகளுடன் சுற்றுலா பயணிகளுக்கும் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்த பிரச்சினை தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய மனிதநேயத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர், அனுராதபுரம் சோமரதன தேரர், இந்த பிரச்சினையை தீர்க்க பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் பிரதேசத்தில் பல சுகாதார பிரச்சினைகள் உருவாகலாம் என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!