அநுராதபுரத்தில் உள்ள முன்னணி கலவன் பாடசாலையில், 12 வயது மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யபட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டார்.திரப்பனே – அத்துன்கம பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அநுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் 12 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சில், மாணவியின் பெற்றோர்களால் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட விவாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த நபரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
அநுராதபுர பாடசாலையில் 12 வயது மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியர் விளக்கமறியலில்
By newsteam
0
44
RELATED ARTICLES