Home » அன்னதான கந்த எனப் போற்றப்படும் செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழா சிறப்பாக நிறைவு

அன்னதான கந்த எனப் போற்றப்படும் செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழா சிறப்பாக நிறைவு

by newsteam
0 comments
அன்னதான கந்த எனப் போற்றப்படும் செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழா சிறப்பாக நிறைவு

கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோக்ஷம் விண்ந்திர முழங்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த அன்னதான கந்த என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 15 ஆம் நாளின் தேர்த்திருவிழா இன்று (06) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.இதன்போது சந்நிதி முருகன் தேர் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பகதர்கள் கலந்துகொண்டு வேலவனின் அருளை பெற்றனர்.உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் புலம்பெயர் தமிழர்களும் தாயகத்திற்கு வருகை தந்து செல்வச் சந்நிதி முருகன் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!