Home » அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தினர் நால்வர் கைது

அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தினர் நால்வர் கைது

by newsteam
0 comments
அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தினர் நால்வர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ் பிரிவில் உள்ள கொக்னஹார கிராமத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருப்பதாக அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.இதன் போது புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை 4 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்த பொலிஸார் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.தண்ணீர் மோட்டார், மின்சாரம் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு டார்ச், சங்கிலிகள் மற்றும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தோண்டும் பணி பல நாட்களாக நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை 4 பேரும் சட்ட நடவடிக்கைகாக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்ன மற்றும் பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரட்க சதாரசிங்க ஆகியோரின் மேற்பார்வையில் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர தலைமையிலான குழுவினர் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!